சிங்கப்பூரில் 50 மில்லியன் வெள்ளிவரை முதலீடு செய்யவுள்ள P&G நிறுவனம்.!

P&G pumps in SG$50m to advance digital capabilities in SG
Photo: REUTERS

P&G (Procter & Gamble) நிறுவனம் சிங்கப்பூரில் அடுத்த 3 ஆண்டுகளில் புதிய மின்னியல் திட்டத்திற்காக சுமார் 50 மில்லியன் வெள்ளி வரை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

iFuture என்னும் அந்தத் திட்டம், சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து அறிமுகமானது. அதன்கீழ், 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்; போக்குவரத்து அமைச்சர்.!

இந்த பயிற்சிகள், சந்தைப்படுத்துதல், விற்பனை, தரவுப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் புதிய மின்னிலக்கப் பதவிகளை ஏற்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் S.ஈஸ்வரன் கூறுகையில், இது ஊடக அறிவியல், விற்பனைத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பயிற்சி வழங்குவது இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும் என்று கூறினார்.

மேலும், இந்த திட்டமானது ஊழியர்கள், அனைத்து உலக அனுபவம் பெற வகைசெய்யும் என்றும், வட்டாரச் சந்தைகளுக்குச் சேவையாற்றும்போது, உலகளாவிய வாய்ப்புகளைப் பெற இது உதவும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை – பலர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…