சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்; போக்குவரத்து அமைச்சர்.!

Singapore Public transport Service
Pic: Najeer Yusof/Today

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தற்பொழுது 50 முதல் 60 விழுக்காடு வரை இருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சூழலுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிட்டு பார்க்கையில், உச்ச நேரங்களிலும், உச்ச நேரம் அல்லாத வேளைகளிலும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: COVID-19 தடுப்பு மருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கக்கூடும் : WHO தலைவர்!

சிங்கப்பூரில் கூடுதலான ஊழியர்கள் பணியிடங்களுக்கு திரும்பலாம் என மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளதால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என திரு. ஓங் கூறினார்.

மேலும், சிங்கப்பூரில் அதிரடி திட்டத்திற்குப் பிறகும் ரயில்களில் கூட்டம் அதிகமில்லை. எனவே, பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலைக்குரிய அம்சமாக இல்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், வேலைக்குச் செல்லும் போக்கையும் மற்றும் பயணப் பழக்கங்களையும் மாற்றுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பை முதலாளிகள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திரு. ஓங் அறிவுறுத்தினார்.

மேலும், முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை நேரம் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை – பலர் கைது..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…