சிங்கப்பூரின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் (காணொளி) – முன்பதிவு தொடக்கம்

Scorpio Electric

சிங்கப்பூர் நிறுவனமான “Scorpio Electric” அதன் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் X1ஐ கடந்த அக்டோபர் 22 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தியது.

இந்த X1 மின்சார மோட்டார் சைக்கிள், ஒருமுறை சார்ஜ் செய்தால் 105கிமீ வேகத்தில், சுமார் 200கிமீ வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஆடவர் கைது

Scorpio Electric-ன் இணையதள விவரங்களின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் அதிகபட்சமாக 10Kw மோட்டார் சக்தியைக் கொண்டுள்ளது, மேலும் 90 சதவிகிதம் சார்ஜ் ஆக 2.5 மணிநேரம் மட்டுமே ஆகும்.

அதன் ஆண்டு உற்பத்தி குறைவாக இருப்பதாகவும், மேலும் X1 விலை USD$9,800 (S$13,200)க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 22 முதல், வலைத்தளம் மூலம் USD$1,000 (S$1,300) முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

அதன் ஃபேஸ்புக் பக்கத்தின்படி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மோட்டர் சைக்கிளை பார்வையிட முடியும்.

“காலவரையற்ற முடக்க நிலையிலும் இருக்க முடியாது, கட்டுப்பாடுகள் இன்றி விட்டுவிடவும் முடியாது” – பிரதமர் லீ