சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான உணவகம் – துவங்கிய அரை மணி நேரத்தில் முடிந்த முன்பதிவு..!

Bookings for SIA's Restaurant
(Photo Credit : Singapore Airlines)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (SIA) புது முயற்சியாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏர்பஸ் A380 விமானங்களில் உணவகம் அமைத்துள்ளது.

இன்று (அக். 12) நள்ளிரவில் அதற்கான முன்பதிவு துவங்கப்பட்ட வெறும் அரை மணி நேரத்திற்குள், அனுமதிச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இன்று 4 பேருக்கு கொரோனா – தங்கும் விடுதியில் ஒரு பாதிப்பு..!

இதற்கான கட்டண விவரம் முன்னர் வெளியானது, அதில் ஒரு வேளை உணவிற்கு S$50 முதல் S$300 வரை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள், காத்திருப்பு பட்டியலில் இணைந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் ஆர்வம் காரணமாக, காத்திருப்பு பட்டியலுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சாப்பிடலாம் என்றும், விமானம் சாங்கி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் SIA கடந்த மாதம் அறிக்கையில் தெரிவித்தது.

அத்துடன் இலவச மதுபானங்களும், மற்ற பானங்கள் வழங்கப்படும் என்றும், மேலும் திரைப்படம் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருடன் மீண்டும் பயணத்தை தொடங்க மேலும் ஒரு நாடு இணக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…