சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வு!

சிங்கப்பூரில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines). இந்த நிறுவனம் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. மேலும், பைலட் பயிற்சி, சுற்றுலாவுக்கான விமானங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. அத்துடன் சரக்கு விமான சேவையையும் வழங்கி வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் இந்நிறுவனத்தின் பங்கு மிகப்பெரியது.

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு மிக அதிக மதிப்பு!

இந்த நிலையில், சிங்கப்பூர் அரசு, கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தை அறிவித்து, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.அதன்படி, ஜெர்மனி, புரூணை ஆகிய இரு நாடுகளுக்கு இரு மார்க்கத்திலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு சிறப்பு பயணப் பாதை விரிவுப்படுத்தியுள்ளது விமான போக்குவரத்துறை. குறிப்பாக, இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அரசு அனுமதி அளித்துள்ள சர்வதேச விமான போக்குவரத்து வழித்தடத்துக்கு அதிகமான விமானங்களை இயக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆயத்தமாகி வருகிறது. மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவுவைத் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே முன்பதிவு நிறைவடைகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டுதான் கூடுதல் விமானங்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் எடுத்து வருவதாக தகவல் கூறுகின்றன.

‘அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் வாரத்துக்கு நான்கு முறை விமான சேவையை வழங்கவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’!

இந்த நிலையில், சிங்கப்பூர் பங்குச்சந்தைகளில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை நேற்று (11/10/2021) 9.6 சதவீதம் அதிகரித்தது. 5 சிங்கப்பூர் டாலர் 62 காசுகள் வரை சென்ற பங்கு விலை, சந்தை மூடும் நேரத்தில் 5 சிங்கப்பூர் டாலர் 52 காசுக்கு வர்த்தகமானது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்பதால், அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு அறிவித்த சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தால் இந்த நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் உயர்ந்ததாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றன.

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு மிக அதிக மதிப்பு!

அதேபோல், சாங்கி விமான நிலையத்தில் சேவைகளையும், விமானங்களுக்கான உணவு விநியோகச் சேவையையும் வழங்கும் ‘SATS’ நிறுவனத்தின் பங்கு விலை 6.5% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.