உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாவது இடம்

Singapore Passport
(Photo: ANI/Twitter)

புதிய உலகளாவிய குறியீட்டின் படி, உலகிலேயே சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸால் (Henley & Partners) இந்த குறியீடு வெளியிடப்படுகிறது.

ஆயுதமேந்தி கடையில் கொள்ளை – 5 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த போலீஸ்!

“விசா” தேவை இல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நடைமுறையில் இந்த பட்டியல் ஆண்டு முழுவதும் தவறாமல் புதுப்பிக்கப்படுகிறது.

தற்போது, ​​ஜப்பானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். ஆகையால் இது முதலிடத்தை பிடித்துள்ளது.

சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ள முடியும், 2021இன் ஆரம்பத்தில் 190 நாடுகளிலிருந்து அதிகரித்துள்ளது.

2019ஆம் ஆண்டில், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை முதல் இடத்தில் இருந்தன. கடந்த ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பயணத்தை எளிதாக்கியதால் ஜப்பான் பட்டியலில் முன்னேறியது.

சிங்கப்பூரை தொடர்ந்து, தென் கொரியாவும் ஜெர்மனியும் 191 நாடுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய ஊழியருக்கு தொற்று – தங்கும் விடுதியில் ஊழியர்களுக்கு பரிசோதனை