ஆயுதமேந்தி கடையில் கொள்ளை – 5 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த போலீஸ்!

AETOS auxiliary police officer charged with robbing
(Photo: TODAY)

சிங்கப்பூரில் 38 வயதான AETOS துணை காவல் அதிகாரி மீது ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

38 வயதான மஹாதி முகமது முக்தார், கடந்த திங்கள்கிழமை பிற்பகல் ஜுராங் ஈஸ்ட் MRTக்கு அருகிலுள்ள ஜுராங் கேட்வே சாலையில், பிளாக் 135இல் உள்ள OT Credit கடன் வழங்கும் கடையில் ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய ஊழியருக்கு தொற்று – தங்கும் விடுதியில் ஊழியர்களுக்கு பரிசோதனை

அதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார், ஆனால் அதே நாளில் அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பணியில் இருந்த அந்த அதிகாரி துப்பாக்கியுடன் அந்த கடைக்கு நடந்து சென்று கடை ஊழியரிடம், கொள்ளை அடிக்க வந்திருப்பதாகவும், கத்த வேண்டாம் என்றும், எல்லா பணத்தையும் பையில் வைக்கும்படியும் மிரட்டியுள்ளார் என்று சிங்கப்பூர் காவல் படை கூறியுள்ளது.

அந்த கடையின் ஊழியர் S$24,000க்கும் அதிகமான பணத்தை ஒப்படைத்த பின்னர், மஹாதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த வழக்கு குறித்து மாலை 3.55 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, பின்னர் அவர்கள் ஐந்து மணி நேரத்திற்குள் அவரை கைது செய்தனர்.

காவல்துறை, கடையின் சி.சி.டி.வி கேமரா மற்றும் பிற AETOS ஊழியர்களின் உதவியை கொண்டு அதிகாரியை அடையாளம் கண்டது.

சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் அந்த அதிகாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், அந்தக் கடையில் 5 மாதங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனையையும், குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர் மரணம்: COVID-19 தடுப்பூசி சிக்கல்கள் காரணமல்ல – MOH