சிங்டெல்லின் 5ஜி கட்டமைப்பில் இணைந்த 1,80,000- க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்!

File Photo: AFP

 

உலகம் முழுவதும் அதிவேக இணையதள சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க, 5ஜி தொழில்நுட்பத்தைக் கட்டமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன முன்னணி தகவல் தொடர்புத் துறையைச் சார்ந்த நிறுவனங்கள். அந்த வகையில் சிங்கப்பூரில் தகவல் தொடர்புத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது சிங்டெல் நிறுவனம் (Singtel).

துறைமுகத்தில் பணியாற்றும் கடலோடிகளுக்கும் கொரோனா தடுப்பூசி!

சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் அதிகமானோர் சிங்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளன. இந்த நிலையில், 5ஜி கட்டமைப்புக்கான சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. அன்று முதல் சுமார் 1,80,000- க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அதில் இணைந்திருப்பதாக சிங்டெல் நிறுவனம் நேற்று முன்தினம் (30/08/2021) தெரிவித்தது. கடந்த ஜூன் மாதம் 30- ஆம் தேதி நிலவரப்படி, அந்த நிறுவனத்தில் 4.1 மில்லியன் கைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள 4ஜி தொழில்நுட்பத்தைக் காட்டிலும், 5ஜி தொழில்நுட்பம் அதிவேக இணைய சேவையை வழங்கும். உதாரணமாக, ஹெச்டி எனப்படும் உயர் ரக ஒலி, ஒளி அம்சங்களை சில வினாடிகளில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும். ஆனால், 4ஜி இணைய சேவையைப் பயன்படுத்தி அவற்றைப் பதிவிறக்கம் செய்ய பல நிமிடங்கள் தேவைப்படும். சிங்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் ‘Sinopharm’ தடுப்பு மருந்து!

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நொடிக்கு நொடி வளர்ந்து வரும் நிலையில், 5ஜி தொழில்நுட்பம் மூலம் அதன் வேகத்தை மேலும் அதிகரிக்க முடியும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும். தகவல் தொழில் நுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. டிஜிட்டல் காலத்தில் 5ஜி இணைய சேவை இன்றியமையாதது.