செம்ம அறிவிப்பு! கட்டுப்பாடுகளை எளிதாக்கி வெளிநாட்டினருக்கு கிரீன் சிங்னல் கொடுத்த நாடு!

Getty

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு கோவிட்-19 சோதனை முறைகளை தாய்லாந்து எளிதாக்குகிறது.

இந்த புதிய நடைமுறை வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அட! இப்படியும் மோசடி கும்பல் செயல்படுமா… போலீசிடம் எப்படி தகவல் தெரிவிப்பது? – வாங்க தெரிஞ்சிப்போம்!

தற்போதுள்ள நடைமுறையின் கீழ், ​​தாய்லாந்தின் தனிமை இல்லா பயணத் திட்டத்தின்கீழ் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் அந்நாட்டிற்கு வந்தவுடன் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும், அதோடு ஐந்தாவது நாளிலும் PCR எடுக்க வேண்டும்.

அச்சமயம், அவர்கள் இரண்டு சோதனைத் தேதிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்கியிருக்க வேண்டும், மேலும் முன்பதிவுச் செய்த சான்றுகளையும் வழங்க வேண்டும்.

ஆனால் இனி மார்ச் 1 முதல், தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அந்நாட்டுக்கு வந்த ஐந்தாவது நாளில் PCR பரிசோதனைக்கு உட்பட வேண்டியதில்லை என்று பாங்காக் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக, அவர்கள் ஐந்தாவது நாளில் சுயமாக நிர்வகிக்கப்படும் ART சோதனையை மட்டுமே செய்ய வேண்டும்.

தாய்லாந்து தனிமைப்படுத்தல் இல்லாத நுழைவுத் திட்டத்தை கடந்த பிப்ரவரி 1, 2022 அன்று மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!