சிங்கப்பூரில் அலுவலக இடத்தை குறைக்கும் DBS குழுமம்!

(Photo: BFSI-Elets Technomedia)

வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறைகள் காரணமாக DBS குழுமம் சிங்கப்பூரில் இருக்கும் அதனுடைய அலுவலக இடத்தை குறைப்பதாக கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வங்கியான DBS மற்றும் மரீனா பே நிதி மையம் தனது அலுவலகத்தில் ஏறத்தாழ 75,000 சதுர அடியை குறைக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

விமான பயணங்களை தொடங்க முயற்சி… இந்த நாட்டுடன் சிங்கப்பூர் ஒத்துழைப்பு

வருகின்ற டிசம்பர் மாதத்தில் தனது இடத்தை கட்டட உரிமையாளரிடம் கொடுக்க இருப்பதாகவும் மேலும் தனிப்பட்ட முறையில் அதற்காக யோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்றானது அதிகமான ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய முடியும் என்ற முறையை உணர்த்தி இருப்பதால் அலுவலக இடத்தை உபயோகிப்பது பற்றி யோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து பணிபுரியும் செயல்முறையானது வெற்றிகரமாக நடைபெறுவதால் சில நிறுவனங்கள் தங்களது அலுவலக இடத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 32 பேருக்கு தொற்று உறுதி – உள்நாட்டில் ஒரு புதிய பாதிப்பு