அதி நவீன வசதிகளுடன் திறக்கப்பட உள்ள ‘துவாஸ்’ துறைமுகம்!

World maritime centre top
Pic: Port of Singapore

 

சிங்கப்பூரில் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் தடுப்பதை இலக்காக நிர்ணயித்து அரசு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு அரசு சார்பில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகைகளையும், மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியமும் வழங்கி வருகிறது.

அரசின் நடவடிக்கையால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்சார வாகனங்கள் பதிவு அதிகரித்துள்ளது. மேலும், குப்பை அள்ளுவதற்கு மின்சாரத்தில் இயங்கும் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களும் சிங்கப்பூரில் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வருங்காலங்களில் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், கார்கள் அதிகளவில் பொது போக்குவரத்தில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Greenwich டிரைவ் DHL மையத்தில் புதிய கிருமித்தொற்று குழுமம் அடையாளம்!

கரியமில வாயுவை வெளியேற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரில் மிகப் பெரிய துறைமுகமாக விளங்கும் ‘துவாஸ்’ துறைமுகத்தில் சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த துறைமுகத்தில் அதிகளவு சரக்குகளை கையாளும் வகையிலும், அதி நவீன வசதிகளுடன் கால தாமதமின்றி சரக்குகளை கையாளும் வகையிலும் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், வரும் 2050- ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் தடுப்பது ‘துவாஸ்’ துறைமுகத்தின் இலக்கு ஆகும்.

குடிநுழைவுத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் படி, சிங்கப்பூருக்கு வரும் கப்பல்களும், சிங்கப்பூரில் இருந்து புறப்படும் கப்பல்களும் நங்கூரமிட நியமிக்கப்பட்ட இடம் ‘துவாஸ்’ துறைமுகம். அடிப்படை வசதிகள், முனைய வாசல்கள். கட்டடங்கள், பராமரிப்பு தளங்கள் போன்றவற்றின் மேம்பாட்டுப் பணிகள் சீராக நடைபெற்று வருகிறது.

வார் மெமோரியல் பார்க்கில் ஷர்ப்போர்ட் மூலம் உலாவிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முதல் இரண்டு கப்பல் நிறுத்தும் இடங்கள் (பெர்த்துகள்) ‘துவாஸ்’ துறைமுகத்தில் திட்டமிட்டப்படி, நடப்பாண்டு இறுதியில் திறக்கப்படும். தானியக்கக் கப்பல் துறை மேடை போன்ற வசதிகளுடன் 2040- ஆம் ஆண்டில் முழுமை காணவிருக்கும் மாபெரும் துறைமுகம். இது உலகிலேயே மிகப்பெரிய தானியக்க முனையமாகத் திகழும்.

2027- ஆம் ஆண்டிற்குள் நிறைவு பெறவிருக்கும் முதல் கட்டம் 21 கப்பல் நிறுத்தும் இடங்களைக் கொண்டிருக்கும். இது 20 மில்லியன் டிஇயு சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் தொடர்ந்து சிறப்பாகவும், அதிக சரக்குகளை கையாண்டது ‘துவாஸ்’ துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.