Greenwich டிரைவ் DHL மையத்தில் புதிய கிருமித்தொற்று குழுமம் அடையாளம்!

new cluster DHL centre
Pic: Google Maps

Greenwich டிரைவ் 1-ல் உள்ள DHL விநியோகத் தொடர் நிலையம் புதிய கிருமித்தொற்றுக் குழுமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. DHL விநியோகத் தொடர் நிலையத்துடன் தொடர்பில் இருந்த 28 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், Chinatown Complex கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்பில் இருந்த மேலும் 10 பேருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்தக் கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடைய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 81ஆக உயர்ந்துள்ளது.

வார் மெமோரியல் பார்க்கில் ஷர்ப்போர்ட் மூலம் உலாவிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Chinatown Complex கிருமித்தொற்று குழுமம் உள்ளிட்ட 16 கிருமித்தொற்று குழுமங்களை சுகாதார அமைச்சகம் அணுக்கமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று குழுமங்களில் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண பரிசோதனைகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், தொடர்புத்தடங்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் போன்றவை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 7 மணி நேரம் தூங்கி… S$30 வரை வெகுமதிகளை தட்டிச்செல்லுங்கள்!