தினமும் 7 மணி நேரம் தூங்கி… S$30 வரை வெகுமதிகளை தட்டிச்செல்லுங்கள்!

Sleep 7 hours day challenge
Unsplash

நீங்கள் நாள் ஒன்றுக்கு ஏழு மணிநேரம் தூங்கினால் வெகுமதி கிடைக்கும் என்று கூறினால் எவ்வவளவு இன்பமாக இருக்கும்.

தேசிய ஸ்டெப்ஸ் (National Steps Challenge) சவாலின்கீழ் இந்த தூங்கும் சவாலை சுகாதார மேம்பாட்டு வாரியம் (HPB) அறிமுகம் செய்துள்ளது.

தஞ்சோங் பகார் விபத்து: சாலையில் கூடுதல் பாதுகாப்பு சேர்க்கப்படும் – LTA அறிவிப்பு.!

ஒவ்வொரு இரவும் குறைந்தது ஏழு மணிநேரம் தூங்கினால் தினமும் 25 ஹெல்த் பாயிண்டுகள் (Healthpoints) வழங்கப்படும்.

அதே போல, தினமும் 7 மணி நேரம் தூங்கினால் S$30 வரை இணைய பற்றுச்சீட்டுகள் (eVouchers) வழங்கப்படும்.

சவால் காலம்

போனஸ் வாரங்களில் கூடுதலாக பாய்ண்டுகளை பெறலாம். இதற்காக செப். 11 முதல் மார்ச் 31, 2022 வரை பதிவு செய்யலாம்.

இந்த சவால் காலம் நவம்பர் 1, 2021 முதல் ஏப். 1, 2022 வரை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்லீப் சேலஞ்ச் பற்றிய கூடுதல் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

சவாலுக்கு தகுதி பெற அளவுகோல்களை

  • தகுதியான NRIC வைத்துள்ள சிங்கப்பூரர் அல்லது சிங்கப்பூரின் நிரந்தரவாசிகள்
  • தகுதியான FIN வைத்துள்ள வெளிநாட்டவராகவும் இருக்கலாம்
  • 17 வயது மற்றும் அதற்கு மேல் (பிறந்த ஆண்டின் அடிப்படையில்) இருக்க வேண்டும்
  • முந்தைய பருவங்களில் “Steps Rewards” முடித்திருப்பவர்கள்

தூக்கம் கண்காணிப்பு

தகுதியான பங்கேற்பாளர்கள் புதிய சீசன் 6 HPB fitness tracker கண்காணிப்புக் கருவி மற்றும் Healthy 365 செயலியையும் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு நாளின் தூக்கம், மதியம் 12 மணி முதல் மறுநாள் காலை 11:59 வரை கணக்கிடப்படும்.

குறைந்தது இரண்டு மணிநேர தூக்கம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளின் மொத்த தூக்க காலத்தில் அது கணக்கிடப்படும்.

துல்லியமான கண்காணிப்புக்கான குறிப்புகள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

சிங்கப்பூரில் புதிதாக 555 பேருக்கு தொற்று – தங்கும் விடுதியில் வசிக்கும் 64 பேர் பாதிப்பு