தஞ்சோங் பகார் விபத்து: சாலையில் கூடுதல் பாதுகாப்பு சேர்க்கப்படும் – LTA அறிவிப்பு.!

More road dividers installed
Pic: David Kwok Ng Kan

சிங்கப்பூர் தஞ்சோங் பகார் சாலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது.

தஞ்சோங் பகார் சாலையில் கடந்த பிபர்வரி மாதத்தில் சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளான 13ம் தேதியன்று ஐந்து பேரை பலிவாங்கிய வாகன விபத்து அங்கு நேர்ந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வேகமாக வந்த வெள்ளை நிற BMW கார் ஒன்று காலியாக இருந்த கடைவீட்டில் மோதி தீப்பிடித்துக்கொண்டதில் அதில் இருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரிய தொற்று குழுமமாக அடையாளம் காணப்பட்ட சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் மூடல்

தஞ்சோங் பகார் சாலையில் வரும் மாதங்களில், கூடுதல் சாலை தடங்களைப் பிரிக்கும் தடுப்புகள் போடப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளது.

மேலும், தஞ்சோங் பகார் சாலை, ட்ராஸ் லிங்க் ஆகியவை சேரும் பகுதியில் போக்குவரத்து சமிக்ஞைகள் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்படும் என்றும், போக்குவரத்து காவல் துறையினருடன் நிலப் போக்குவரத்து ஆணையம் தஞ்சோங் பகார் சாலை பகுதியின் சாலை நிலவரத்தை ஆராயும் என்றும் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமாரி இந்திராணி ராஜாவும், ஜோசஃபின் டியோவும் முன்னதாக கூறியிருந்தனர்.

சாலைகளில், கூடுதல் கேமராக்களைப் பொருத்துவது, சாலைகளில் வேகத் தடைகளை அமைப்பது போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த போக்குவரத்து விபத்துகளில் இதில் தான் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் உயிரிழந்ததாக காவல்துறை முன்னதாக தெரிவித்திருந்தது.

வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!