பெரிய தொற்று குழுமமாக அடையாளம் காணப்பட்ட சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் மூடல்

Chinatown Complex Hawker Centre/Facebook

சைனாடவுன் காம்ப்ளெக்ஸ்-ல் (335 ஸ்மித் ஸ்ட்ரீட்) பணிபுரியும் தனிநபர்களிடையே கோவிட் -19 தொற்று பாதிப்பு குறித்து சுகாதார அமைச்சகம் (MOH) விசாரித்து வருகிறது.

இதில் சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் உட்பட மேலும் இரண்டு பெரிய குழுமங்கள் நேற்றைய நிலவரப்படி (செப். 11) அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் புதிதாக 555 பேருக்கு தொற்று – தங்கும் விடுதியில் வசிக்கும் 64 பேர் பாதிப்பு

அந்த குழுமத்தில் மொத்தம் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 58 பேர் கடைக்காரர்கள், மற்றும் உதவியாளர்கள், நான்கு கிளீனர்கள், ஒரு பாதுகாப்பு இடைவெளி தூதுவர் மற்றும் ஊழியர்களின் மூன்று வீட்டு தொடர்புகள் என்றும் MOH கூறியுள்ளது.

அங்கு பணிபுரியும் அனைவருக்கும் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

கிருமிப்பரவை தடுக்கவும், வளாகத்தை நல்லமுறையில் சுத்தம் செய்யவும், சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் இன்று செப்டம்பர் 12 மாலை 3 மணி முதல் செப்டம்பர் 15 இரவு 11:59 வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைனாடவுன் வளாகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கோவிட் -19 சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த செப். 8 மற்றும் செப். 11க்குள் சைனாடவுன் காம்ப்ளெக்ஸ்க்கு சென்றுவந்த அனைவரும், அன்றிலிருந்து 14 நாட்கள் தங்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்கவும், முடிந்தவரை சமூக தொடர்புகளை குறைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!