அனைத்து சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கும் எல்லைகளை முழுமையாக திறந்த நாடு – மகிழ்ச்சி!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் இன்று பிப்ரவரி 21 முதல் ஆஸ்திரேலியா தனது சர்வதேச எல்லைகளை முழுமையாக மீண்டும் திறந்துள்ளது.

இந்நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் அந்நாட்டை சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!

அதில் சுமார் 27 சர்வதேச விமானங்கள் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னிக்கு செல்லும் என்றும் Reuters தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா 2020 மார்ச் மாதம் அதன் எல்லைகளை மூடியது, அது தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தொழில்களில் சுற்றுலாத் துறை ஒன்றாகும், அதன் மதிப்பு A$60 பில்லியன் (S$58 பில்லியன்) என்று கூறப்படுகிறது.

மேலும், அந்நாடு பணியமர்த்தும் ஊழியர்களில் சுமார் 5 சதவீதம் பேர் சுற்றுலாத் துறையில் வேலையில் உள்ளனர்.

“சிங்கப்பூர் டாலர்” உள்ளிட்ட ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!