வாட்ஸ்அப்பில் வந்தது செம்ம அப்டேட் – இனி தனி தனியாக லாக் செய்யலாம்: இப்போதே அப்டேட் செய்யுங்க

whatsapp-locked-chats
Unsplash/Asterfolio & Whatsapp

வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் சாட்களை இனி லாக் செய்து வைத்துக்கொள்ள முடியும், தங்களின் உரையாடல்களை மிகவும் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் இனி மாற்றிக்கொள்ளலாம்.

வாட்ஸ்அப் பயனர்களுக்கான இந்த புதிய அம்சம் நேற்று மே 15 அன்று அறிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு விபத்து… பலத்த காயம் – விடுப்பிலும் ஓடி முதலுதவி செய்த சிங்கப்பூர் துணை மருத்துவர்

வாட்ஸ்அப் தற்போது end-to-end encryption என்ற தனிப்பட்ட பாதுகாப்புகளை கொண்டுள்ளது. ஆனாலும் கூட ஒருவர் மற்றொருவரின் மொபைலை அன்லாக் செய்து அவரின் தனிப்பட்ட WhatsApp சாட் செய்திகளைப் பார்க்க முடியும்.

இனி உங்களின் தனிப்பட்ட சாட்களை தேர்வு செய்து அதனை lock செய்து வைத்துக்கொள்ள முடியும். இதனால் மற்றொருவர் உங்களின் வாட்ஸ்அப் உள்ளே சென்றாலும் உங்கள் தனிப்பட்ட சாட்களை பார்க்க முடியாது.

நாம் லாக் செய்ய விரும்பும் நபரின் பெயரைத் கிளிக் செய்து, Lock விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் Chat உரையாடலை லாக் செய்து கொள்ளலாம்.

அதற்கு password மற்றும் வேறு சில Lock அம்சங்களையும் நம்மால் தேர்வு செய்துகொள்ள முடியும்.

அவற்றை மீண்டும் நாம் காண விரும்பினால் சாட் பாக்ஸில் மேலிருந்து கீழ் இழுத்தால் Locked chats என்று தோன்றும்.

இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வருகிறார் ரொனால்டோ… Fan boy வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிஷ்டம்