வெளிநாட்டு ஊழியர்களுக்கு விபத்து… பலத்த காயம் – விடுப்பிலும் ஓடி முதலுதவி செய்த சிங்கப்பூர் துணை மருத்துவர்

accident paramedic help foreigners
Shin Min Daily New

விபத்தில் சிக்கிய இரு வெளிநாட்டு ஊழியர்களுக்கு விடுமுறையில் இருந்த சிங்கப்பூர் துணை மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்து உதவினார்.

ஜோகூர் பாருவில் விடுமுறைக்கு சென்றிருந்த அவர், விபத்தில் காயமடைந்த இரண்டு மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு முதலுதவி அளித்ததைக் கண்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற அவர், விரைந்து சென்று உதவி வழங்கியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வருகிறார் ரொனால்டோ… Fan boy வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிஷ்டம்

இந்த சம்பவம் கடந்த மே 8 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் டெப்ராவ் என்ற இடத்தில் நடந்தது.

ஊழியர்கள் இருவரும் மோட்டார் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, கல்லில் மோதி கீழே கவிழ்ந்ததாக நேரில் பார்த்தவர்களின் சாட்சிகளின் படி கூறப்படுகிறது.

மேலும், ஊழியர்கள் வேலை நிமித்தமாக சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தாம் விடுமுறையில் இருந்தாலும் அடுத்தவர் உயிரை காப்பாற்ற ஓடி உதவிய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

மசூதியில் திருடிய நபர்… CCTV காட்சிகளை வைத்து பிடித்த அதிகாரிகள்