உலகின் முதல் மிதக்கும் Apple ஸ்டோர் சிங்கப்பூரில்… திறக்கும் தேதி அறிவிப்பு..!

World’s first floating Apple Store officially opens Sep 10
World’s first floating Apple Store officially opens Sep 10 (PHOTO: Apple)

Apple ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு இன்பச் செய்தி. சிங்கப்பூரில் நாளை மறுநாள் Apple நிறுவனத்தின் 3வது புதிய கடை திறக்கப்பட உள்ளது.

அதுவும் உலகிலேயே தண்ணீரில் மிதக்கும் முதல் Apple கடை என்ற சிறப்புடன் அது உருவாக உள்ளது. இது மெரினா பே சாண்ட்ஸில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 40 மீட்டர் உயர கிரேனில் சிக்கிக்கொண்ட ஊழியர் மீட்பு..!

மெரினா பே சாண்ட்ஸ் அருகே மிதக்கும் ஒரு பந்து போன்று அது உருவாகும், முன்பு 2011 முதல் 2016 வரை Avalon இரவு விடுதி அங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தக் கட்டடம் முழுவதும் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. கடையின் உள்ளே இருந்துகொண்டு, 360 டிகிரி கோணத்தில் எந்த இடையூறும் இல்லாமல், சிங்கப்பூரின் நகர தோற்றத்தைக் காணமுடியும்.

சிங்கப்பூரில் கடந்த 2017ஆம் ஆண்டு, முதல் Apple கடை ஆர்சர்ட் ரோட்டில் உள்ள மாலில் திறக்கப்பட்டது. அதே போல 2வது கடை கடந்த ஆண்டு ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் திறக்கப்பட்டது.

இந்த 3வது கடை மரினா பே சாண்ட்ஸில் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளதாக Apple நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உயிரை மாய்த்து கொண்ட தமிழக இளைஞர் – உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…