சிங்கப்பூரில் 40 மீட்டர் உயர கிரேனில் சிக்கிக்கொண்ட ஊழியர் மீட்பு..!

SCDF responders rescue injured worker from 40m-high crane
(Screengrabs: Facebook/SCDF)

சிங்கப்பூரில் சுமார் 40 மீட்டர் உயர கிரேனில் சிக்கிக்கொண்ட ஊழியர் ஒருவரை, சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினர் (SCDF) பாதுகாப்பாக மீட்டனர்.

உயரத்தில் சிக்கிக்கொண்ட அந்த ஊழியருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உயிரை மாய்த்து கொண்ட தமிழக இளைஞர் – உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை..!

SCDF-இன் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவின் (DART) தீயணைப்பு வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய குழு, அந்த ஊழியரை பாதுகாப்பாக மீட்டதாக, பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் மாலை 4.30 மணியளவில் ஹவ் சன் டிரைவ் (How Sun Drive) வழியாக உள்ள ஒரு கட்டுமான தளத்தில் நடந்துள்ளது.

[Height rescue operation @ Construction site along How Sun Drive]Yesterday at about 4.25pm, SCDF firefighters and specialists from the elite Disaster Assistance and Rescue Team (DART) were deployed for a height rescue operation at a construction site along How Sun Drive. A man who was working on a tower crane 40 meters in the air had injured his leg and was unable to head down to safety.A team of four DART specialists climbed a cat ladder up the crane and traversed across its narrow arm to reach the injured man. They secured themselves in place and set up a lowering system involving ropes and pulleys. One of the specialists who was cross-trained as an Emergency Medical Technician treated and bandaged the man’s wound, all while being suspended 40 meters in the air.On the ground, another team of DART specialists attached a stretcher to a rope that had been deployed by the team on the crane. Working in tandem, both teams of DART specialists hoisted the stretcher to where the injured man was. The team on the crane then worked carefully to secure the man firmly on the stretcher.With all the pieces in place about an hour into the operation, it was time to bring the man down to safety. A DART specialist on the crane attached himself to the stretcher and was slowly lowered to the ground with assistance from the other DART specialists and the firefighters.Back on the ground, an SCDF paramedic assessed the injured man before conveying him to Sengkang General Hospital.

Posted by Singapore Civil Defence Force on Monday, September 7, 2020

நான்கு DART வல்லுநர்கள் அடங்கிய குழு, கிரேன் மேலே ஏறி காயமடைந்த அந்த ஊழியரை சென்றடைந்தனர் என்று SCDF தெரிவித்துள்ளது.

பின்னர் அவர் செங்காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 13,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு திரும்ப முடியவில்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…