சிங்கப்பூரில் உயிரை மாய்த்து கொண்ட தமிழக இளைஞர் – உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை..!

கொரோனா தொற்றுநோய் சூழலில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால் சிங்கப்பூரில் கறம்பக்குடி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவரது பிரேத உடலை தமிழகத்தின் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 13,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு திரும்ப முடியவில்லை..!

தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவருடைய 28 வயது மகன் சந்திரசேகரன்.

கடந்த 11 மாதங்களுக்கு முன், சந்திரசேகரன் சிங்கப்பூர் வந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அதனை தொடர்ந்து, 5 மாதங்கள் வேலை பார்த்ததாகவும், பின்னர் கொரோனா காரணமாக அவர் வேலை இழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர், கடன் பெற்று சிங்கப்பூர் வந்த நிலையில், வேலை இழந்ததை அடுத்து அவர் மனமுடைந்தார். இது குறித்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் தொடர்பு கொண்டு வருத்தத்துடன் பேசியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரை மாய்த்து கொண்ட சந்திரசேகரன்

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி, அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள், அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

சந்திரசேகரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏழ்மை நிலையில் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும், அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு – தூதரகம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…