சிங்கப்பூரில் 13,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு திரும்ப முடியவில்லை..!

13,000 workers still not scheduled for COVID-19 rostered routine testing
(Photo: AFP)

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) நிலவரப்படி, வழக்கமான கட்டாய கிருமித்தொற்றுக்கான சோதனைக்கு உட்படுத்தப்படாததால், மொத்தம் 13,000 ஊழியர்கள் தற்போது தங்களுடைய வேலையை மீண்டும் தொடர முடியவில்லை.

செப்டம்பர் 5 காலக்கெடுவிற்கு முன்னர், தங்கள் ஊழியர்களை சோதனைக்கு உட்படுத்த பதிவு செய்வது குறித்து முதலாளிகளுக்கு நினைவூட்டல்கள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : “நிலைமை தற்போது நிலையாக இருந்தாலும், தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இன்னும் நாம் வெல்லவில்லை” – பிரதமர் லீ..!

அவ்வாறு செய்யத் தவறிய ஊழியர்கள் பணிக்குத் திரும்ப முடியாது என்று மனிதவள அமைச்சகம் (MOM), கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA), பொருளியல் வளர்ச்சிக் கழகம் (EDB) மற்றும் சுகாதார மேம்பாட்டு வாரியம் (HPB) ஆகிய அமைச்சுகள் கூட்டு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளன.

இந்த கிருமித்தொற்று சூழ்நிலையில், வேலைகள் பாதுகாப்பாக மறுதொடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு – தூதரகம்..!

இந்த 13,000 ஊழியர்களுக்கான அணுகல் குறியீடு “சிவப்பு” என்று குறிப்பிடப்படும், இதனால் அவர்கள் வேலைக்கு திரும்ப முடியாது. இது மற்ற ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊழியர்கள் தங்கள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டவுடன், அவர்களின் அணுகல் குறியீடு “பச்சை” நிறத்திற்கு மாறும், பின்னர் அவர்கள் வேலைக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

விரைவில், ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அவர்களின் முதலாளிகள் பதிவு செய்துகொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 தங்கும் விடுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…