சிங்கப்பூரில் மேலும் 3 தங்கும் விடுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்..!

New COVID-19 clusters detected at 3 dormitories that were previously cleared of the disease
(Photos: Google Maps/Gaya Chandramohan)

சிங்கப்பூரில் அண்மை வாரங்களாக, முன்னர் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட சில தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி மேலும் மூன்று வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய COVID-19 கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு – தூதரகம்..!

புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள்:
  • 15 Penjuru Walkஇல் உள்ள Cassia @ Penjuru தங்கும் விடுதி
  • 6 துவாஸ் சவுத் ஸ்ட்ரீட் 15இல் அமைந்துள்ள CDPL துவாஸ் தங்கும் விடுதி
  • 12 Kranji ரோட்டில் உள்ள Kranji Lodge 1

ஆகியவற்றில் புதிய கிருமித்தொற்று பரவல் குழுமங்கள் உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்துள்ளது.

Cassia @ Penjuru தங்கும் விடுதி

முந்தைய 13 சம்பவங்கள் Cassia @ Penjuru தங்கும் விடுதியுடன் தொடர்புடையது. கடந்த ஆகஸ்ட் 10 அன்று மனிதவள அமைச்சகத்தால் (MOM) இந்த விடுதியில் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த குழுமம் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, 1,900க்கும் மேற்பட்ட COVID-19 சம்பவங்கள் அங்கு உறுதிசெய்யப்பட்டன.

Mandai Lodge 1

முந்தைய 5 சம்பவங்கள் Mandai Lodge 1 உடன் தொடர்புடையது. கடந்த ஆகஸ்ட் 8 அன்று மனிதவள அமைச்சகத்தால் (MOM) இந்த விடுதியில் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த குழுமம் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, 670க்கும் மேற்பட்ட COVID-19 சம்பவங்கள் அங்கு உறுதிசெய்யப்பட்டன.

துவாஸ் சவுத் தங்கும் விடுதி

அண்மையில் 7 சம்பவங்கள் துவாஸ் சவுத் தங்கும் விடுதியுடன் தொடர்புடையது. கடந்த ஆகஸ்ட் 10 அன்று, இந்த விடுதியில் கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த குழுமம் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, 2,000க்கும் மேற்பட்ட COVID-19 சம்பவங்கள் அங்கு உறுதிசெய்யப்பட்டன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்ப இன்னும் 15,000 பேர் காத்திருப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…