“நிலைமை தற்போது நிலையாக இருந்தாலும், தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இன்னும் நாம் வெல்லவில்லை” – பிரதமர் லீ..!

Our situation is stable for now, but the battle is far from won - PM Lee
Our situation is stable for now, but the battle is far from won - PM Lee (PHOTO: LIANHE ZAOBAO)

சிங்கப்பூரின் நிலைமை தற்போது நிலையாக இருந்தாலும், கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இன்னும் நாம் வெல்லவில்லை. ஒவ்வொருவரும் விழிப்புடனும் சமூக பொறுப்புடனும் தொடர்ந்து நம் பங்கைச் செய்ய வேண்டும் என்று திரு லீ தனது முகநூல் பக்கத்தில் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூர், டான் டோக் செங் மருத்துவமனையில் (TTSH) தொற்று நோய்களுக்கான தேசிய மையம் (NCID) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 தங்கும் விடுதிகளில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள்..!

NCID திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே, COVID-19 தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் முன்னணியில் இருந்ததாக, திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் COVID-19 தொற்று தாக்கும் முன்பே, NCID இயங்கியதால் நாம் அதிர்ஷ்டசாலி என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இது தற்செயலாக அமையவில்லை. இது அரசு நிறுவனங்கள், மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சுகாதாரப் பங்காளிகளின் பல ஆண்டுகால திட்டமிடல் மற்றும் கடின உழைப்பின் விளைவாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Today marks one year since the official opening of the National Centre for Infectious Diseases (NCID) at Tan Tock Seng…

Posted by Lee Hsien Loong on Sunday, September 6, 2020

இது இல்லாமல் இருந்திருந்தால், தொற்றுநோய்க்கான சிங்கப்பூரின் நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NCID மற்றும் சிங்கப்பூரின் அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள், தொற்றுநோய்க்கு எதிராக முதல் வரிசையில் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், NCIDக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் பயணிகளின் கவனத்திற்கு – தூதரகம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…