கோவையிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கான விமானங்கள் 3 மடங்கு அதிகரிப்பு!

Coimbatore Flights

தமிழகத்தின் கோவையிலிருந்து சிங்கப்பூர் உட்பட பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதில் வெளிநகரங்களுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையானது ஆறு மாதங்களில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் குடியிருப்பு பகுதியில் பெரிய மரம் விழுந்தது 3 கார்கள் சேதம்!

அதாவது இந்த கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், கடந்த ஜூன் மாதம் முதல் கோவையிலிருந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய நகரங்களுக்கு கோவையில் இருந்து நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், டில்லி, அகமதாபாத், மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு போன்ற உள்நாட்டு விமான சேவையும் அதில் அடங்கும்.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட விமான சேவை கடந்த மே மாதம் முதல் துவங்கியது. இதில் ஜூன் மாதத்தில் 344 விமானங்கள் இயக்கப்பட்டன.

அதே போல, விமான சேவையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 576ஆக இருந்தது. மேலும், செப்டம்பரில் 767 ஆகவும், அக்டோபரில் 899 ஆகவும் அதிகரித்தது.

தற்போது கடந்த மாதத்தில், அந்த சேவையானது 936ஆக உயர்ந்துள்ளது.

அதாவது கடந்த ஆறு மாதங்கள் நிலவரப்படி, அது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெடுஞ்சாலையில் விபத்து… மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…