நெடுஞ்சாலையில் விபத்து… மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர் கைது!

PIE crash arrested
Four taken to hospital after PIE crash (Photo: Video circulation online)

பான் தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) நேற்று முன் தினம் (டிசம்பர் 11) இரவு விபத்து ஏற்பட்டது.

இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட ஓட்டுநர் உட்பட நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிங்கப்பூர்-திருச்சி விமானத்தில் சோதனை.. கடத்தல் தங்கக் கட்டிகள் பறிமுதல்!

Adam சாலையில் இருந்து வெளியேறுவதற்கு முன், துவாஸை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர், சிங்கப்பூர் குடிமை பாதுகாப்புப் படை (SCDF) மற்றும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு 10.05 மணியளவில் உதவிக்கு அழைக்கப்பட்டனர்.

அதில் ஒருவர் காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் அந்த நபரை மீட்க ஹைட்ராலிக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன என்று SCDF தெரிவித்துள்ளது.

அதனை அடுத்து, டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ​​29, 36 மற்றும் 68 வயதுடைய மூன்று ஓட்டுனர்கள், 40 வயது பயணி ஒருவர் சுயநினைவில் இருந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

பின்னர், 29 வயதான ஆடவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்தனர்.

இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டது.

காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

இயந்திரத்தில் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட முகக்கவசங்கள் – 10 பேரிடம் விசாரணை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…