சிங்கப்பூர்-திருச்சி விமானத்தில் சோதனை.. கடத்தல் தங்கக் கட்டிகள் பறிமுதல்!

Singapore Trichy flight

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தது. வழக்கம் போல பயணிகளிடம் விமான நிலைய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த பயணிகளில் சுரேஷ் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் சுமார் 152 கிராம் தங்க கட்டிகளை மறைத்து வைத்தது தெரியவந்தது.

இயந்திரத்தில் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட முகக்கவசங்கள் – 10 பேரிடம் விசாரணை!

அதன் இந்திய மதிப்பு ரூ.7.65 லட்சம் ஆகும் என்றும் ஊடக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதே போல, துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சோதனை செய்ததில், சாதிக் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 1128 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அதே விமானத்தில் முகமது ஜியாவுதீன் சாகிப் என்பவர் மறைத்து வைத்துக்கொண்டு வந்த 896 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 2176 கிராம் ஆகும்.

மேலும், அதன் மொத்த இந்திய மதிப்பு ரூ.1 கோடியே 9 லட்சத்து 22 ஆயிரம் ஆகும்.

சிங்கப்பூர் பல்கலைக்கழக விடுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு COVID-19 சோதனை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…