சிங்கப்பூர் பல்கலைக்கழக விடுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு COVID-19 சோதனை!

COVID-19 testing NUS NTU SMU
(Photo: Lawrence Wong/FB)

COVID-19 சோதனை தன்னாட்சி பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து விடுதிகளிலும் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU), சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் (SMU) மற்றும் சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் (SUTD) ஆகியவைக்கும் அது பொருந்தும்.

சிங்கப்பூரில் தந்தையை கொலை செய்த சந்தேகத்தின்பேரில் 14 வயது இளையர் கைது!

தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகக் குழுக்களுக்கு COVID-19 சோதனையை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் இது ஒரு பகுதியாக இருப்பதாக கல்வி அமைச்சின் (MOE) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஜனவரி 2021இல், ஒரு முறை COVID-19 சோதனைக்கு விடுதிகளில் வசிப்போரை உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிக அடர்த்தி கொண்ட வாழ்க்கைச் சூழலைக் கருத்தில் கொண்டு சமூகத்தில் கிருமி பரவுவதற்கான அபாயத்தை கட்டுக்குள் கொண்டுவர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைக்கு அரசாங்கம் நிதியுதவி செய்வது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகங்கள், அடுத்த சில வாரங்களில் தங்கள் மாணவர்களுக்கு கூடுதல் விவரங்களை வழங்கும்.

அனைத்து ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் சோதனைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அதனை செய்ய சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் MOE பரிந்துரை செய்யும் என்று அவர் கூறினார்.

குறிப்பிட்ட நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை கட்டுப்பாடுகளை நீக்கவுள்ள சிங்கப்பூர்!

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய தொற்று பாதிப்பு – MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…