வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய தொற்று பாதிப்பு – MOH

Work permits S Pass salary salaries false offences
(Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் இன்றைய (டிச.11) நிலவரப்படி, புதிதாக 8 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 7 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஒன்றுகூடல் தொடர்பாக 53 பேர் மீது குற்றச்சாட்டு!

தனிமை

அவர்கள் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒரு புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமூக பரவல்

புதிய பாதிப்புகளில் யாரும் சமூக அளவில் பாதிக்கப்படவில்லை என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மொத்த பாதிப்பு

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,305ஆக உள்ளது.

மேலும் விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு 3000 செட் பாரம்பரிய இந்திய இனிப்புகள் நன்கொடை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…