இயந்திரத்தில் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட முகக்கவசங்கள் – 10 பேரிடம் விசாரணை!

unauthorised redemption face masks investigated
(Photo: Joshua Lee)

வென்டிங் இயந்திரங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் முகக்கவசங்களை பெற்றதாக, 3 தனித்தனியான வழக்குகளில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் 10 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அந்த குற்றவாளிகளில், 12 வயது சிறுவனும் ஒருவர் என்று நேற்று (டிசம்பர் 11) காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் பல்கலைக்கழக விடுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு COVID-19 சோதனை!

அந்த இயந்திரங்கள் Temasek அறக்கட்டளையின் மூலம், நாடு தழுவிய முகக்கவச விநியோக திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத தனிப்பட்ட தகவல்

ஒரு வழக்கில், இயோ சூ காங் (Yio Chu Kang) சமூக நிலையத்தில் உள்ள இயந்திரத்தில் இருந்து, தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி 460க்கும் மேற்பட்ட முக கவசங்களை சட்டவிரோதமாக முறையில் பெற்றதாக 47 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு சம்பவம், தஞ்சோங் பகார் (Tanjong Pagar) சமூக நிலையத்தில் அரங்கேறியுள்ளது.

அங்கு இரண்டு முகக்கவசங்களை சட்டவிரோதமாக பெற்றதாக 33 வயதான பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

தனித்தனியாக, 12 முதல் 19 வயதுக்குட்பட்ட எட்டு பேர், அதே போல பல இடங்களில் உள்ள இயந்திரங்களிலிருந்து 90க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பெற்றதாக விசாரிக்கப்படுகிறார்கள்.

மூன்று வழக்குகள் குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

சட்டம்

இதுபோன்ற மோசடி குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

சட்டவிரோதமாக பெற்ற தனிப்பட்ட தகவல்களை வைத்துள்ள குற்றவாளிகளுக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், S$10,000 வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்பிட்ட நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை கட்டுப்பாடுகளை நீக்கவுள்ள சிங்கப்பூர்!

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய தொற்று பாதிப்பு – MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…