ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Photo: RJ Balaji Official Twitter Page

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும், ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.

துருக்கி குண்டு வெடிப்பில் சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்டார்களா? – கண்டனம் தெரிவித்த சிங்கப்பூர் தூதரகம்!

அதேபோல். இந்த படத்தை ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கையில் கத்தரியுடன் சலூன் கடையில் பணியாற்றுவது போல் போஸ் கொடுத்துள்ளார். நகைச்சுவை நிறைந்த இந்த படம் வரும் 2023- ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலகை ஓட்டையில் விழுந்த சிங்கப்பூரர்! – மலேசியாவின் பினாங்கு அரசு நடவடிக்கை!

இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.