“இந்தியாவுக்கு ஏர்பஸ் A380 சூப்பர்ஜம்போ விமானம் மீண்டும் இயக்கப்படும்”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் (Singapore Airlines) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “கொரோனா தொற்றுநோய் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர்பஸ் A380 சூப்பர்ஜம்போ விமானம் (Superjumbo), 20 மாதங்களுக்கு பிறகு அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் படிப்படியாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு மீண்டும் இயக்கப்படவுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு!

அதன்படி, அடுத்தாண்டு (2022) ஜனவரி 10- ஆம் தேதி முதல் மும்பை மற்றும் சிங்கப்பூர் இடையே Airbus A350-900 (விமான எண் SQ 424/423) என்ற விமானத்திற்கு பதிலாக ஏர்பஸ் A380 சூப்பர்ஜம்போ இயக்கப்படும். இது முழுக்க முழுக்க VTL விமான சேவை (Vaccinated Travel Lane) ஆகும். பயணிகள் சிங்கப்பூருக்கு வந்ததும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

அதேபோல், அடுத்தாண்டு பிப்ரவரி 14- ஆம் தேதி முதல் டெல்லி மற்றும் சிங்கப்பூர் இடையே போயிங் 787- 10க்கு (விமான எண் SQ 406/403) பதிலாக ஏர்பஸ் A380 சூப்பர்ஜம்போ விமானம் இயக்கப்படும். இது VTL விமான சேவை ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திண்டுக்கல் வந்த ஊழியருக்கு ஒமைக்ரான் ?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்தியாவின் பொது மேலாளர் சை யென் சென் (Sy Yen Chen, General Manager India, Singapore Airlines) கூறுகையில், “இந்த சூப்பர்ஜம்போ விமானம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிரபலமான தேர்வாக இருப்பதால், A380 இந்தியாவுக்குத் திரும்புவது எங்களுக்கு ஒரு சிறப்பு சந்தர்ப்பமாகும். இந்தியாவில் இருந்து நாங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியதிலிருந்து, சிங்கப்பூருக்கு எங்கள் ‘VTL’ விமானங்களுக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.

A380, அதன் பெரிய இருக்கை திறன் கொண்ட, மும்பை மற்றும் டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்தை விரும்பும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான தேர்வாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பிய வெளிநாட்டு பாலியல் தொழிலாளி – “PASS”காக அதிகாரிக்கு கட்டணமின்றி பாலியல் சேவை

அதிநவீன வசதிகளைக் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் A380 சூப்பர்ஜம்போ விமானம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ஏர்பஸ் A380 சூப்பர்ஜம்போ விமானம் இரண்டு தளங்களைக் கொண்டது. நான்கு வகுப்புகளில் (Four Classes) 471 இருக்கைகளுடன் (471 Seats) கட்டமைக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் (Upper Deck) ஆறு அறைகள் மற்றும் 78 வணிக வகுப்பு இருக்கைகள் (Business Class Seats) உள்ளது. பிரதான தளத்தில் (Main Deck) 44 பிரீமியம் பொருளாதார வகுப்பு (Premium Economy Class) மற்றும் 343 பொருளாதார வகுப்பு இருக்கைகள் (Economy Class Seats) உள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களை வழங்கிய ‘ItsRainingRaincoats’!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ‘VTL’ சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வாராந்திர மற்றும் தினசரி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.