கோவை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா’ விமான சேவை- ஜூன், ஜூலை, மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Phase 5 Schedule of flights from Singapore as of 19/08/2020
(Photo: Air India)

டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் (Air India), உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும், பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

வீட்டில் சமைத்த உணவை விற்று பல மில்லியன் டாலர் வணிகத்தை ஈட்டிய சிங்கப்பூர் பொறியாளர்கள்

அதன் தொடர்ச்சியாக, கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே இருமார்க்கத்திலும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. நாள்தோறும் இரண்டு விமான சேவைகளை இவ்வழித்தடத்தில் விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த விமான சேவை நேரடி விமான சேவை கிடையாது. எனினும், சென்னை, டெல்லி வழியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தட விமான சேவைக்கு AIRBUS A321 என்ற விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூன் 14 முதல் இந்த நிறுவனங்களுக்கு அபராதமா? – பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க மனிதவள அமைச்சகம் அறிவிப்பு

இந்த விமான சேவைக்கான ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in// என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.