சிங்கப்பூரில் மேலும் 2,069 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Photo: Today

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (15/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (15/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 2,069 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் அளவில் 2,065 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சமூக அளவில் 1,964 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 101 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 4 பேருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,39,272 ஆக உயர்ந்துள்ளது.

பூனைக்குட்டியும் எங்களுக்கு உயிர் தான் – விரைந்து சென்று குட்டியை காப்பாற்றிய சிங்கப்பூர் காவல்துறை

கொரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 71 வயது முதல் 96 வயது வரை இருப்பவர்கள் ஆவர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 594 ஆக அதிகரித்துள்ளது.

20 மாத கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது: வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் எல்லையை திறந்தது இந்தியா!

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,533 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 255 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 123 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 72 பேரின் உடல்நிலைக் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கடந்த நாளில் மட்டும் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 3,270 பேர் வீடு திரும்பியுள்ளனர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.