“ஜிஎஸ்டி உயர்வு அடுத்தாண்டு ஜன.1- ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரலாம்”- பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!

Photo: Wikipedia

சிங்கப்பூரில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அந்தந்த துறைச் சேர்ந்த அமைச்சர்கள் விரிவான விளக்கத்தை அளித்து வருகின்றனர். அந்த வகையில், விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி உயர்வு (Goods and Services Tax- ‘GST’) குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

பழங்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதையடுத்து, கடந்த ஜனவரி 11- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த நிதித்துறையின் இரண்டாம் அமைச்சரும், பிரதம அலுவலக அமைச்சருமான இந்திராணி ராஜா, “உலக அளவிலான பணவீக்க நெருக்கடிச் சூழலில், விலையேற்றத்தின் தாக்கத்தில் இருந்து சிங்கப்பூரர்களை அரசு காத்து வருகிறது. நடப்பாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது, சிங்கப்பூரர்களின் வாழ்க்கை செலவினங்களை சமாளிக்க உதவுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, ஜிஎஸ்டி உயர்வை நிரந்தரமாகத் தள்ளி வைக்க முடியாது; ஆனால், அதனால் ஏற்படும் தாக்கத்தைத் தள்ளிப் போடலாம்” எனத் தெரிவித்தார்.

இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கோலப்போட்டியை நடத்தியது ‘Lisha’!

இதனிடையே, கடந்த 2018- ஆம் ஆண்டு ஜிஎஸ்டியை உயர்த்துவது குறித்த அறிவிப்பை சிங்கப்பூர் அரசு முதன்முதலில் அறிவித்தது. ஜிஎஸ்டி 7%லிருந்து 9% ஆக உயர்த்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு, நடப்பாண்டு ஜூலை மாதம் 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், உலகளாவிய பணவீக்க நெருக்கடியாலும், ஏற்ற இறக்கமாக இருக்கும் பொருளியல் மீட்சியாலும, ஜிஎஸ்டி உயர்வானது அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1- ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த கால அவகாசம் தொழிற்துறையினருக்கு மிகுந்த பயனை அளிக்கும் என்று கூறப்படுகிறது.