இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கோலப்போட்டியை நடத்தியது ‘Lisha’!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

சிங்கப்பூரில் வழக்கமான உற்சாகத்துடன் தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, ‘Lisha’ ஏற்பாடு செய்திருந்த பொங்கல் கொண்டாட்டங்களில் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதேபோல், சிங்கப்பூரர்களும் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். இதனால் இந்திய மரபுடைமை நிலையம், லிட்டில் இந்தியா சாலைகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பழங்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மேலும், ‘Lisha’ பொங்கல் குறித்த பாரம்பரியத்தை இன்றைய தலைமுறையினர் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. பசு மாடுகள் வரவழைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட மாட்டு வண்டி, பொங்கல் பானைகள் உள்ளிட்டவை பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (16/01/2022) இந்திய மரபுடைமை நிலையத்தில், ‘Lisha’ இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான (Indian Migrant Workers) கோலம் (ரங்கோலி) போட்டியை நடத்தியது. இந்த போட்டியை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் (High Commissioner of India to Singapore) தொடங்கி வைத்தார். எம்டிஎம் விஜய மோகன் (சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஹோல்டர்) போட்டியை மேற்பார்வையிட்டார்.

‘ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட்’ நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி!

சிங்கப்பூரில் உள்ள என்பிஎஸ் சர்வதேசப் பள்ளி மாணவர்களால் (NPS international school, Singapore) உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளை இந்திய தூதர் பார்வையிட்டார்.