பழங்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Photo: Immigration & Checkpoints Authority Official Facebook Page

சிங்கப்பூரில் போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. அதனை முறியடிக்கும் வகையில், குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம், சுங்கத்துறை அதிகாரிகள், சிங்கப்பூர்- மலேசியா எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அவ்வப்போது தொடர் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

‘ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட்’ நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி!

இந்த நிலையில், கடந்த ஜனவரி 8- ஆம் தேதி அன்று, துவாஸ் சோதனைச் சாவடியில் (Tuas Checkpoint) உள்ள குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (Immigration & Checkpoints Authority- ‘ICA’) அதிகாரிகள் 1,838 அட்டைப்பெட்டிகள் (Cartons) மற்றும் 703 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை (Packets of Duty-Unpaid Cigarettes) மலேசிய நாட்டு பதிவெண் கொண்ட பழங்களை ஏற்றிச் செல்லும் லாரி மூலம் சிங்கப்பூருக்கு கடத்தும் முயற்சியை முறியடித்தனர்.

முலாம்பழம் (Melons) கொண்ட சில பெட்டிகளுக்குள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தபோது அவர்களின் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. லாரியை ஓட்டி வந்த மலேசியாவைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்த அதிகாரிகள், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறைக்கு (Singapore Customs) அனுப்பி வைத்தனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூர் பேருந்தில் இடம்பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளரின் புகைப்படம்!

சிங்கப்பூரின் எல்லைகளைப் பாதுகாப்பது குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க, கடத்தல் முயற்சிகளைக் கண்டறிந்து தடுப்பதற்கு குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிகள் தொடர்ந்து பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.