சிங்கப்பூர் பேருந்தில் இடம்பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளரின் புகைப்படம்!

Photo: ItsRainingRaincoats

சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு (Migrant Workers), அங்குள்ள சமூக அமைப்புகள் பல்வேறு உதவிகளையும், பரிசுப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டு வருகிறது.

ஜனவரி 17- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கஷ்டங்களை மறந்து, மகிழ்கின்றனர். அதேபோல், சிங்கப்பூர் மனிதவள அமைச்சகமும் அவர்களுக்கு பக்கபலமாய் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ‘ItsRainingRaincoats’ என்ற சமூக அமைப்பு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுகள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பரிசுப் பொருட்களை தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் மூலம் தொடர்ச்சியாக விநியோகித்து வருகிறது. மேலும், இந்த சமூக அமைப்புடன் இணைந்து செல்வந்தர்களும் தங்களின் பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட விஷேச நாட்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர். இது அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகின்றனர்.

புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் மகாத்மா காந்தி நினைவு மண்டபம்!

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் பேருந்து சேவை எண் 74 மற்றும் 183 (Bus service numbers 74 and 183) ஆகிய இரண்டு பேருந்து சேவைகளில் ‘ItsRainingRaincoats’ பேனர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது பேருந்துகளின் பின்புறத்தில் ஒட்டப்பட்டுள்ளது. பேனரில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. இந்த புகைப்படங்கள் வரும் மார்ச் மாதம் 11- ஆம் தேதி வரை ஒட்டப்பட்டிருக்கும். மூவ் மீடியா மற்றும் பிற ஆதரவாளர்களின் (Supporters) பெருந்தன்மைக்கும் எங்கள் தன்னார்வலர்களின் (Volunteers) உதவிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ‘ItsRainingRaincoats’ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அத்துடன், பேனரில் ‘எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க எங்களுடன் இணையுங்கள்’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பது, சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.