‘ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட்’ நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி!

Photo: ALL INDIA SUPER MART

சிங்கப்பூரில் உள்ள நோரிஸ் சாலையில் நான்கு மாடிக் கட்டடத்தில் இயங்கி வருகிறது ‘ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட் பிரைவேட் லிமிடெட்’. அதேபோல், அப்பர் வெல்ட் சாலையில் ‘இந்தியன் சூப்பர் மார்க்கெட்’ என்ற பேரங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த பேரங்காடி கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு மார்க்கெட்டுகளிலும் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.

‘சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள்’ என்ற ஆங்கில நூலை கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வெளியிட்டார்!

இந்த இரண்டு பேரங்காடிகளும் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தான் உள்ளன. இரண்டு பேரங்காடிகளுக்குமான இடைவெளி 300 மீட்டர் ஆகும். இந்த நிலையில், ‘ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட் பிரைவேட் லிமிடெட்’ தனது வழக்கறிஞர்கள் மூலம் ‘இந்தியன் சூப்பர் மார்க்கெட்’ என்ற வர்த்தகப் பெயர், வர்த்தக முத்திரைப் போன்றவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு ‘இந்தியன் சூப்பர் மார்க்கெட்’ நிர்வாகத்திடம் கோரியது.

இருப்பினும், இதனை ஏற்க மறுத்தது ‘இந்தியன் சூப்பர் மார்க்கெட்’ நிறுவனம். அதைத் தொடர்ந்து, ‘ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமும், அதன் இயக்குனரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “இந்தியன் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தங்களது பதிப்புரிமையை மீறியதுடன், தங்களது வர்த்தகப் பெயரைப் பயன்படுத்திப் பலனடைந்துள்ளனர். எனவே, வர்த்தகப் பெயர், வர்த்தக முத்திரைப் போன்றவற்றைப் பயன்படுத்த இந்தியன் சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தது.

சிங்கப்பூர் பேருந்தில் இடம்பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளரின் புகைப்படம்!

இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்ற நீதிபதி வேலரி தியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு மார்க்கெட்டுகளின் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதனால் நீதிமன்றத்தில் காரசார விவாதம் ஏற்பட்டது.

இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், இரண்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் பதிவு முத்திரையும் ஒன்றாக இருப்பதாகக் கூறுவதை ‘ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட் நிறுவனம்’ நிரூபிக்கவில்லை. அத்துடன், ‘இந்தியன் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் வர்த்தகப் பதிவு முத்திரை பொதுமக்களின் குறிப்பிட்ட பிரிவினரிடையே தங்களின் வர்த்தகமும், ‘ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட்’ நிறுவனத்தின் வர்த்தகமும் ஒன்றுதான் எனத் திரித்துக் கூறப்பட்டுள்ளது.

புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் மகாத்மா காந்தி நினைவு மண்டபம்!

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, ‘ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட்’ நிறுவனத்தின் பதிவு முத்திரையும் ஒன்றாகக் காட்சியளிப்பதற்கு பதிலாக அவற்றுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தியன் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் தனது பொருள்கள் ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வேறுபட்டது எனக் காண்பிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் நான் கருத்தில் கொள்கிறேன். இந்த இரண்டு நிறுவனங்களின் பெயர் பலகை, கடை முகப்பு ஆகியவையும் மாறுப்பட்டிருக்கிறது. இந்த காரணங்களால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்தியன் சூப்பர் மார்க்கெட் பிரைவேட் லிமிடெட் எனப் பெயர் கொண்ட, அந்த மார்க்கெட் தனது வர்த்தக முத்திரையைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆல் இந்தியா சூப்பர் மார்க்கெட், இந்தியன் சூப்பர் மார்க்கெட்டுக்கு வழங்க வேண்டிய செலவுத்தொகை குறித்த விசாரணை பின்னாளில் நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டார்.