‘சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள்’ என்ற ஆங்கில நூலை கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வெளியிட்டார்!

Photo: Education Minister Chan Chun Sing Official Facebook Page

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் 80- ஆம் ஆண்டு அறிமுகம் விழா மற்றும் ‘சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள்’ என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா நேற்று (15/01/2022) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (Education Minister Chan Chun Sing) கலந்துக் கொண்டார். அவருக்கு பொன்னாடைப் போர்த்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல், விழாவில் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஓட்டுநர் கண்ணாடி வழி முன் அங்கத்தை பார்த்ததாக வீடியோ வெளியிட்ட பெண் பயணி – பெண்ணை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

விழாவில், ‘Singapore Tamil Muslims’ எனப்படும் ‘சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள்’ என்ற ஆங்கில நூலை கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வெளியிட்டு, சிறப்புரையாற்றினார். இந்த நூலை, சங்கத்தின் துணைத்தலைவரும், ஓய்வுப் பெற்ற தமிழாசிரியருமான மு.அ.மசூது, சங்கத்தின் தலைவர் ராஜா முஹம்மது ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

விழா குறித்து தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங், “நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு தமிழ் முஸ்லிம் சமூகம் பெருமளவில் பங்களிப்பை வழங்கியுள்ளது. சமூகம் தங்கள் சமூகத்தையும், நமது தேசத்தையும் உயர்த்தக் கடுமையாக உழைத்து, அடுத்த தலைமுறைக்கு கல்வி மற்றும் சமூக சேவை மூலம் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் மகாத்மா காந்தி நினைவு மண்டபம்!

தமிழ் முஸ்லிம் சமூகத்தின் இந்த கூட்டு முயற்சிகள் சிங்கப்பூரின் சமூகச் சூழலை வலுப்படுத்தியுள்ளன. இளைஞர்கள் வாழ்க்கையில் நல்ல தொடக்கத்தைப் பெற உதவுவது, குறைவானவர்களுக்கு அதிகமாகக் கொடுப்பது மற்றும் நமது மக்களை துன்பத்திலிருந்து மீள்வதற்கு உதவுகிறது.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் 80- வது ஆண்டு நினைவாக வெளியிடப்படும் ‘சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்கள்’ புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பு இன்று (15/01/2022) மாலை வெளியிடப்பட்டதைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

ஜனவரி 17- ஆம் தேதி அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

தமிழ் முஸ்லிம் சமூகத்தின் (Tamil Muslim community) உறுப்பினர்களின் சேவை மனப்பான்மைக்காகவும், அதைத் தொடர்ந்து நமது சமூகத்திற்கும், தேசத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.