திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட் நிறுவனம்- விரிவான தகவல்!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாம் நாட்டின் (Vietnam) ஹோ சி மின் (Ho Chi Minh) என்ற நகரத்துக்கு தினசரி விமான சேவையை இரு மார்க்கத்திலும் வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot). இந்த வழித்தட விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

கட்டுமான ஊழியரை அடித்து தாக்கிய சக ஊழியர் – இதல்லாம் ஒரு காரணமா ?

தற்போது, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு ஒன்று முதல் மூன்று தினசரி விமான சேவைகளை வழங்கி வருகிறது. அதேபோல், வியட்நாமில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு தினசரி ஐந்து விமான சேவைகளை ஸ்கூட் நிறுவனம் வழங்கி வருகிறது.

Photo: Flyscoot

எனினும், வரும் அக்டோபர் 30- ஆம் தேதி முதல் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு இயக்கப்படும் விமான சேவையை ஐந்தாக உயர்த்தப்படும் என்றும், வாரத்தில் ஒரு சில நாட்களில் மட்டும் நான்கு விமான சேவைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் MRT ரயில் பாதையில் திறக்கப்படவுள்ள 11 புதிய நிலையங்கள் – சிறப்புகள் என்ன?

இது குறித்த விமான பயண அட்டவணையை வெளியிட்டுள்ள ஸ்கூட் நிறுவனம், விமான பயண டிக்கெட் முன்பதிவையும் தொடங்கியுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.