‘ரிஸ்க்’ நாடுகள் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை நீக்கியது இந்தியா!

Photo: Wikipedia

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ‘ஓமிக்ரான்’ (Omicron) என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், ‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த வகையில், வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாகப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பரிசோதனைகளும் கட்டாயமாக்கப்பட்டது.

சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 9 பேருக்கு தொற்று – தொடரும் தீவீர சோதனை

குறிப்பாக, இந்தியாவில் ‘ஓமிக்ரான்’ தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ‘ஓமிக்ரான்’ பரவலாம் என்ற ரிஸ்க் (Countries At- Risk) என்றழைக்கப்படும் ஆபத்தான நாடுகளின் பட்டியலை வெளியிட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ரிஸ்க் நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் விமான நிலையத்திற்கு வந்ததும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவு தெரியும் வரை, அவர்கள் விமான நிலையத்திலேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (09/12/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், ரிஸ்க் நாடுகள் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், ரிஸ்க் நாடுகள் தொடர்பான புதிய பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

“தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்”- சிங்கப்பூர் காவல்துறை அறிவுறுத்தல்!

அதன்படி, பிரிட்டன், தென்னாபிரிக்கா, பிரேசில், ஜிம்பாப்வே, சீனா, கானா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஹாங்காங், இஸ்ரேல், தான்சானியா, போட்ஸ்வானா ஆகிய 12 நாடுகள் ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் உள்ளன.

சிங்கப்பூரை ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதன் மூலம் இந்தியாவுக்கு வரும் பயணிகள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. அதே சமயம், கூடுதல் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள McDonald’s கடைகளில் ‘Breakfast Family Meal’-யை வாங்குபவர்களுக்கு ‘Picnic Set’ இலவசம்!

இதனால் இந்தியா, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் கூடுதல் விமானங்களை இயக்க விமானங்கள் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் இந்தியாவுக்கு வரும் சிங்கப்பூர் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவிற்கு வந்து பண்டிகைகளை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் தயாராகி வருகின்றனர் என்றால் மிகையாகாது.

இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ரிஸ்க் நாடுகள் பட்டியலில் இருந்து ஏற்கனவே வங்கதேசத்தை நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது நாடாக சிங்கப்பூரை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.