சிங்கப்பூரில் உள்ள McDonald’s கடைகளில் ‘Breakfast Family Meal’-யை வாங்குபவர்களுக்கு ‘Picnic Set’ இலவசம்!

Photo: McDonald's

உலகில் மிக பிரபலமான உணவகங்களில் ஒன்று McDonald’s. இந்த நிறுவனம் அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, மலேசியா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தனது கிளைகளைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூரில் McDonald’s உணவு கடைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து உணவுகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால், சிங்கப்பூரில் உள்ள McDonald’s உணவு கடைகளில் வாடிக்கைகையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட உமிழ்நீர் ART கருவி – PCR சோதனையைப் போலவே துல்லியமானது!

அந்த வகையில், தனது வாடிக்கையாளர்களுக்கு இன்பதிர்ச்சியைக் கொடுத்துள்ளது சிங்கப்பூரில் உள்ள McDonald’s நிறுவனம். McDonald’s நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் உள்ள McDonald’s உணவுக் கடைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கடைகளில் மட்டும் ‘Breakfast Family Meal’-யை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘Picnic Set’ இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ‘Breakfast Picnic Packages’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இச்சலுகை இன்று (09/12/2021) முதல் டிசம்பர் 12- ஆம் தேதி வரை பொருந்தும். நாள்தோறும் காலை 07.00 AM மணி முதல் காலை 11.00 AM மணி வரை ‘Breakfast Family Meal’- யை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ‘Picnic Set’ இலவசமாக வழங்கப்படும். ‘Breakfast Picnic Packages’ ஒரு உணவகத்திற்கு ஒரு நாளைக்கு 100 பேக்கேஜ்கள் (Packages) மட்டுமே வழங்கப்படும்.

தடுப்பூசி போடாத மக்களுக்கு சிங்கப்பூர் அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடு! இனி வேறு வழியே கிடையாது!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு McDonald’s உணவுக் கடைகளின் விவரங்கள் பின்வருமாறு:

1.அங் மோ கியோ பூங்கா (Ang Mo Kio Park),
2. மரைன் கோவ் (Marine Cove),
3. கல்லாங் (ஸ்டேடியம் பவுல்வர்டு) (Kallang (Stadium Boulevard),
4. ஜூரோங் மத்திய பூங்கா (Jurong Central Park),
5. மேற்கு கடற்கரை பூங்கா (West Coast Park),
6. கான்பெரா (Canberra).

மேலே குறிப்பிடப்பட்டுள்ள McDonald’s நிறுவனத்தின் உணவுக் கடைகளுக்கு சென்று வாடிக்கையாளர்கள் ‘Breakfast Family Meal’-யை வாங்கிக் கொண்டு, இந்த ‘Picnic Set’- யை இலவசமாகப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 709 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

‘Picnic Set’- லும் பிகினிக் பேக் (Picnic bag), பந்து (Inflatable ball), மடிக்கக்கூடிய பிகினிக் பாய் (Foldable Picnic Mat), ஃபிரிஸ்பீ (Frisbee), உணவு புத்தகம் (Happy Meal book) ஆகியவை தலா ஒன்று வீதம் இடம் பெற்றிருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.