‘ஏஆர்டி பரிசோதனை கருவிகளை அஞ்சல்துறை மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்க ஏற்பாடு!’

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே சுயமாக கொரோனா பரிசோதனை செய்யும் வகையில் ஏஆர்டி எனப்படும் ஆன்டிஜன் ரேபிட் விரைவு பரிசோதனை (Antigen Rapid Test- ‘ART’) கருவிகளை ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக தலா 10 வழங்க சுகாதாரத்துறை அமைச்சகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், இக்கருவிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை சிங்கப்பூர் அஞ்சல் துறையிடம் (Singapore Post) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

‘Community Chest Awards- 2021’ நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா பங்கேற்பு!

இப்பணியில் சுமார் 1,000 அஞ்சல்காரர்கள் ஈடுபடுவார்கள் எனவும், நாளை (22/10/2021) முதல் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை கருவிகள் வழங்கும் பணி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுமக்களுக்கு பரிசோதனை கருவிகள் விரைவில் கிடைக்க ஏதுவாக, சனிக்கிழமைகளிலும் அஞ்சல்காரர்கள் அவற்றை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவர் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, வார நாட்களான சனிக்கிழமைகளில் பரிசோதனை கருவிகளை விநியோகிக்கும் பணியை மட்டுமே அஞ்சல்காரர்கள் மேற்கொள்வர்.

ஒவ்வொரு தொகுப்பிலும் இரண்டு ஏஆர்டி பரிசோதனை கருவிகள் அடங்கிய இரண்டு பெட்டி இருக்கும். இக்கருவியை உபயோகிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம். இக்கருவி பெட்டியில் உள்ள ‘swab’ எனப்படும் பஞ்சு உருட்டை மூக்கில் ஒவ்வொரு நாசித் துவாரத்திலும் 10 முறை சுழற்றி சளி மாதிரியை சேகரிக்க வேண்டும். பின்பு, ஆன்டிஜன் கருவி மூலம் பரிசோதனை முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். இக்கருவி மூலம் 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மேலும் 3,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தற்போதைய சூழலில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இது மிகப்பெரிய அளவில் கைக்கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆன்டிஜன் ரேபிட் விரைவு பரிசோதனைக் கருவிகள் தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.