சிங்கப்பூரில் மேலும் 3,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Pic: File/Today

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் 21- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தாெற்று சூழ்நிலையில் சிறப்பாக செயல்படும் சிங்கப்பூர்!

கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (20/10/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (20/10/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 3,862 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் அளவில் 3,851 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 3,221 பேருக்கு சமூக அளவிலும், 630 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், 11 வெளிநாட்டுக்கு பயணிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,587 ஆக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் சந்தையில் இருந்து வெளியேறுவதாக ‘Best Electricity’ நிறுவனம் அறிவிப்பு!

கொரோனா பாதிப்பால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,718 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், 337 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 67 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.” இவ்வாறு சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.