கோவிட்-19 தாெற்று சூழ்நிலையில் சிறப்பாக செயல்படும் சிங்கப்பூர்!

Photo: Forbes

கோவிட்-19 கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுபடுத்தி, இதுவரை சிங்கப்பூர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கோவிட் -19 தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் பொருளியலை நிர்வாகம் செய்வதில் சிங்கப்பூர் சரியாக செயல்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங்யி காங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு!

சமீபகாலமாக தொற்று அதிகமாக பரவி வருகின்றது, மரணங்களும் அதிகளவில் ஏற்பட்டு கொண்டிருந்த நிலையில், சிங்கப்பூர் அரசின் முறையான அணுகுமுறையாலும், செயல்பாட்டாலும் ஏராளமான கோவிட் -19 மரணங்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

மேன்மேலும் சுகாதார அமைச்சு சிங்கப்பூரின் செயலாற்றலை மேம்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்று ஏற்படும் அதிகமானோருக்கான பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளும் அரசுடன் சேர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் பராமரிப்பிற்கான செயல்பாடுகளும் மிக எளிமையாக்கப்பட்டு வருகின்றது என்றார் அவர்.

மின்னிலக்கத் தாெழில்நுட்பம் சிங்கப்பூரின் பல்வேறு துறைகளை மேம்படுத்தியுள்ளது. கூடிய விரைவில் சுகாதார பராமரிப்பு துறையும் மேம்படுத்தப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்றார் அமைச்சர்.

இருப்பினும் சுகாதார பராமரிப்பு துறையில் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் இடையூறுகள் ஏற்படுவதால் இம்மாற்றங்கள் சற்று சிரமமானதே என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பணிப்பெண்களின் தேவை அதிகரிப்பு – முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்!