சிங்கப்பூரில் வயது குறைந்த வாடிக்கையாளர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 10 கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து..!

10 retailers caught selling cigarettes to minors, licences suspended
10 retailers caught selling cigarettes to minors, licences suspended

சிங்கப்பூரில் பத்து சில்லறை விற்பனையாளர்களின் புகையிலை சில்லறை விற்பனை உரிமங்கள் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த கடைகள் வயது குறைந்த வாடிக்கையாளர்களுக்கு சிகரெட் விற்பனை செய்ததில் சிக்கியதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) வெள்ளிக்கிழமை (ஜூலை 24) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வேண்டுமென்றே காரின் பின்புறத்தில் இருமுறை மோதி, ஆபத்தான முறையில் காரை ஒட்டியதற்காக ஆடவர் கைது..!

ஆணையத்தின் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மூலம் அந்த சில்லறை விற்பனையாளர்கள் பிடிபட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இந்த 10 விற்பனை நிலையங்களும் முதன்முறையாக, வயது குறைந்த வாடிக்கையாளர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த குற்றத்தில் சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்பட்டதில், பிடோக் வட்டாரத்திலும் ஹவ்காங் வட்டாரத்திலும் உள்ள கடைகள் அடங்கும்.

இதுபோன்ற சில்லறை விற்பனையாளர்களிடம் கடுமையான அணுகுமுறை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் தயங்காது என்றும் தெரிவித்துள்ளது.

தங்கள் விற்பனை நிலையங்களில் நடைபெறும் புகையிலை பொருட்களின் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் உரிமையாளர்கள் பொறுப்பு என்றும், மேலும் அவர்களின் ஊழியர்களின் செயல்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பு என்பதையும் ஆணையம் நினைவுப்படுத்தியுள்ளது.

வாடிக்கையார்களின் உடல் தோற்றத்தை வைத்து வயதை மதிப்பிட்டால், சட்டங்களை மீறும் அபாயத்தை விற்பனையாளர்கள் எதிர்கொள்ளக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

விதியை மீறும் கடையின் புகையிலை சில்லறை உரிமம், முதல் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை தற்காலிக தடை செய்யப்படும். மேலும் இரண்டாவது குற்றத்தில் ஈடுபட்டால் அந்த உரிமம் ரத்து செய்யப்படும்.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg