இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதி..!

5 imported cases from India
5 imported cases from India

சிங்கப்பூரில் நேற்றைய (ஜூலை 23) நிலவரப்படி புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அந்த 5 பேரும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள் என்றும் MOH தெரிவித்துள்ளது. அவர்கள் இங்கு திரும்பியவுடன் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்கள் குறித்த தூதரகத்தின் அப்டேட்..!

அவர்களில் இரண்டு பேர், ஜூலை 12 அன்று இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பினர், இருவரும் நிரந்தரவாசிகள் ஆவார்கள்.

மேலும் இருவர் தற்போது சிங்கப்பூரில் பணிபுரியும் வேலை அனுமதி பெற்றவர்கள் என்று MOH தெரிவித்துள்ளது. அவர்கள் ஜூலை 11 மற்றும் ஜூலை 12 ஆகிய தேதிகளில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்தனர்.

மீதமுள்ள ஒருவர், ஜூலை 11 அன்று இந்தியாவில் இருந்து வந்த சார்பு அனுமதி (Dependant’s pass holder) வைத்திருப்பவர்.

புதிய சம்பவங்களில் மீதமுள்ள 341 நபர்களும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புகைபிடித்த குற்றத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு சிறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg