சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்கள் குறித்த தூதரகத்தின் அப்டேட்..!

Vande Bharat Mission Phase 4 Schedule
Vande Bharat Mission Phase 4 Schedule (Photo: India in Singapore/Twitter)

சிங்கப்பூரிலிருந்து, வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் 4ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து கடந்த மே மாதம் முதல் இந்த சிறப்பு விமானங்கள் இந்தியாவிற்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து, தமிழகத்திற்கும் கடந்த மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

அதாவது சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய பகுதிகளுக்கு இந்த வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு விமானங்களில் பயணிக்கும் பயணிகள் அவர்கள் சொந்த செலவில்தான் பயணச்சீட்டு பெற வேண்டும். சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் விமானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் தினங்களில் 4ஆம் கட்டமாக சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதர விவரங்களுக்கு சிங்கப்பூருக்கான இந்திய தூதரக வலைத்தளத்தைப் பார்க்கவும்: https://www.hcisingapore.gov.in/

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புகைபிடித்த குற்றத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு சிறை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg