வேண்டுமென்றே காரின் பின்புறத்தில் இருமுறை மோதி, ஆபத்தான முறையில் காரை ஒட்டியதற்காக ஆடவர் கைது..!

Man to be charged with rash act after allegedly reversing car twice into parked vehicle in Geylang
Man to be charged with rash act after allegedly reversing car twice into parked vehicle in Geylang (Photo: SG Road Vigilante/Facebook)

சிங்கப்பூரில் 55 வயதான ஆடவர் ஒருவர் ஆபத்தான முறையில் காரை ஒட்டியதாகவும், மேலும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

செய்தி வெளியீட்டில், லோராங் 16 கெய்லாங்கில் பொறுப்பற்ற முறையில் அவர் வாகனம் ஓட்டுவதைக் கண்ட சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு கொரோனா உறுதி..!

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் மது அருந்தியதாக நம்பப்படுவதாகவும், வேண்டுமென்றே தனது காரை வேறொரு நபரின் காரின் மீது பின்னோக்கிச் சென்று இரண்டு முறை மோதியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

அவரின் இந்த நடவடிக்கை பாதசாரிகளின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் காவல்துறை கேமராக்களின் உதவியுடன், பெடோக் காவல் பிரிவின் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து கைது செய்தனர்.

மேலும், அவரது வாகனத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்தனர்.

இது தொடர்பான காணொளி, SG Road Vigilante என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

22jul2020geylang lor 16#SLF1160R phv kia forte k3The 55-year-old man was arrested for implicating reckless behavior that endangers the safety of others.The Singapore Police Force issued a statement tonight (July 22) saying that the police received a report yesterday that a man was driving recklessly in Lane 16 of Geylang. Preliminary investigations revealed that the man believed that he had drunk and was suspected of deliberately driving the car backward and hitting another car twice, which also endangered the safety of pedestrians.Bedok Police Station later confirmed the identity of the man and arrested him today. The police also found suspected drug paraphernalia from his car..

Posted by SG Road Vigilante – SGRV on Wednesday, July 22, 2020

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது S$2,000 முதல் S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்,  இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்கள் குறித்த தூதரகத்தின் அப்டேட்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg